Mon - Fri: 10:00AM - 4:00PM / Closed on Weekends info@pledgetorestore.org

Ambarai Fishing Project – February 2021 Progress Report

28.02.2021

“மூன்று மாதங்களில் 220 கிராம் வளர்சி” குளத்தில் நீர் குறைவடையும்வரை காத்திருக்கும் கஞ்சிகுடியாறு மீனவர்கள்

நிதி அனுசரணை:- அன்பு நெறி USA

இணைப்பாக்கம்:- IMHO USA மற்றும் Pledge to Restore

அனுசரணை:- Assist RR (SL)

தொடர் கண்காணிப்பு:- Pledge to Restore

திட்டம்:- கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதன் ஊடாக கஞ்சிகுடியாறு  கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

மீன்குஞ்சுகள் விடப்பட்டு பெப்ரவரி 24 ம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 220 கிராம் வளர்ச்சியடைந்துள்ளது. 20;’ நீர் தேக்கக்கூடிய இக்குளத்தில் தற்போது 18;’ நீர் உள்ளது. கடந்த வருடத்தையும் விட இந்த வருடம் குளத்தின் நிர் குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதிக்கு பின்னரே விவசாய செய்கைக்காக குளத்தில் இருந்து நீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மே மாதத்தில் மீன் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது நாளாந்தம் 2 – 5 மீனவர்;;களே மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். மிகக்குறைந்த அளவிலே மீன்பிடிபடுவதால் தற்போது மீனவர்கள் ஏனைய கூலித்தொழில்களையே நாடவேண்டியுள்ளது.

தற்போது மீன் ஒரு கிலோ 200 ரூபாவிற்கு விற்கப்படுகின்றன. ஆகையால் கஸ்டப்பட்டு பிடித்து குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மீனவர்கள் மீன்பிடியில் தற்போது ஆர்வம் காட்டவில்லை. மீன்பிடியில் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக 2021ம் வருடம் சில புதிய அனுகுமுறைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை நடைபெறுகின்றன.

  • வியாபாரிகளிடம் இருந்து விடுபட்டு நேரடியாக மீனவர் சங்கம் மீனை கொள்முதல் செய்து விற்பனை செய்தல்.

 

  • மீன்பிடி திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு தென்மாவட்டங்களுக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

  • மே மாதம் தொடக்கம் கஞ்சிகுடியாறு மீனவர்களுக்கு ஒரு கிலோ மீனுக்கு 290 ரூபாய் என்கின்ற விலை நிர்னயத்தை உறுதிப்படுத்துதல்.

 

போன்ற புதிய அனுகுமுறைகள் ஊடாக கஞ்சிகுடியாறு மீனவர்கள் மேலதிகமான நன்மைகளை அடைவார்கள். கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி விடப்பட்ட 50 ஆயிரம் மீன்குஞ்சுகளின் வளர்ச்சியை மீனவர் சங்கமும் மீன்பிடித் திணைக்களமும் தொடரந்து அவதானித்து வருகின்றார்கள்.

கடந்த மாதங்களில் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை பிரதேச செயலாளர் மூலமாக பெற்றுக்கொள்வது என்கின்ற நிலையை ஆராய்ந்து பார்த்தபோது இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக அதிக நிதி தேவைப்படுவதுடன் இதற்கான மின்சாரத் தேவையும் அதிகமாக உள்ளதால், மீனை நேரடியாக விற்பனை செய்வது ஊடாக அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கின்ற காரணத்தால் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதில் மீனவர்கள் ஈடுபாடு காட்டாததன் காரணமாக இத்திட்டதை தற்காளிகமாக கைவிடுவதாக தீர்மாணிக்கப்பட்டது.

  • குளத்தில் மீன்பிடிக்கின்றபோதுதான் அனைத்து மீனவர்களையும் ஒன்றுசேக்க முடியுமாக இருப்பதால் ஏனைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மே மாதம் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும்.

 

  • மாதாந்த மீனவர் சங்க கலந்துரையாடலகள் வழமைபோல் நடைபெருகின்றன.

 

  • எதிர்காலத்தில் மீன்குஞ்சுகள் விடுகின்றபோது மீன் வளர்ப்புக்கான உயபந கொள்முதல் செய்து அதனுல் மீன்குஞ்சுகளை பராமரித்து 2 மாதங்களின் பின்னர் குளத்திற்குள் விடுவதால் மீனவர்களுக்கு அதிக அளவில் பயனடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராயப்பட்டது.

 

  • Fry 15 நாள் வளர்ச்சி அடைந்த மீன்குஞ்சு – 50 சதம்
  • Fingerlings 15 – 45 நாள் வளர்ச்சி அடைந்த மீனகுஞ்சு –3.00 ரூபாய்
  • Advance Fingerlings 45 – 75 நாள் வளர்ச்சியடைந்த மீன்குஞ்சு –5.00 ரூபாய்

 

நாம் மீன்குஞ்சு விடவுள்ள குளத்திற்குள்லேயே இந்த உயபந உருவாக்கி அதற்குள் குசல விடுவதன் மூலமாக ஒன்றிற்கான விலை 50 சதமாக இருப்பதால் அதிக அளவில் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்ய முடிம். ஒரு உயபந உருவாக்கத்திற்கு 125000.00 ரூபாய் செலவாகும் இதனை பல வருடங்களாக பயன்படுத்த முடியும். இருப்பினும் உயபந க்குள் மீன் குஞ்சுகளை வளர்க்கின்றபோது மிகவும் அவதானத்துடன் காவல் இருந்து பராமரிக்க வேண்டும்.

  • Net – 1 X 80000.00 = 80000.00
  • Brule 9 X 2000.00 =  00
  • Iron GI pipe frame 1 set X 27000.00
  • total = 125000.00

 

நன்றி

Yours faithfully,

Rasalingam Vigneswaran

DIRECTOR

PLEDGE TO RESTORE FOUNDATION

+94 77 307 5998

28.02.2021