Mon - Fri: 10:00AM - 4:00PM / Closed on Weekends info@pledgetorestore.org

Ambarai Fishing Project – December 2020 Progress Report

Reporting Date: 26th December 2020

கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளின் ஒரு மாத வளர்ச்சி

நிதி அனுசரணை:- அன்பு நெறி USA
இணைப்பாக்கம்:- IMHO USA மற்றும் PLEDGE TO RESTORE FOUNDATION
அனுசரணை:- Assist RR (SL)

தொடர் கண்காணிப்பு:- PLEDGE TO RESTORE FOUNDATION

திட்டம்:- கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதன் ஊடாக கஞ்சிகுடியாறு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

குளத்தின் அளவு:- 280 ஹெக்டேயர்

குளத்தின் நீர் கொள்ளளவு:- 5100 Acre feet

நீர் தேக்கக்கூடிய அளவு:- 20′

பயனாளிகள்:- 85 மீன்பிடியாளர்கள்

24.11.2020ல் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் (குளத்தில் விடுகின்ற போது 1 – 2 cm அளவில் இருந்தது) விடப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் தற்போது 30 – 40 கிராம் அளவில் (6 – 10 cm நீளம்) வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த மீன் குஞ்சுகள் மீனாக வளர்ச்சி அடைந்து அறுவடை செய்வதற்கு நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

மீன் குஞ்சு விடப்பட்டு 4 தொடக்கம் 6 மாதங்களில் அறுவடை செய்ய முடியும். இக்குளத்தில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்துகின்ற வலையின் கண் குறைந்த அளவு 3.5″ எனவே நாம் விடப்பட்ட மீன் குஞ்சுகள் வளர்ச்சி அடைகின்றபோது ஒரு மீன் குறைந்தது 350 கிராம் அளவில் இருக்கும்.

தற்போது பெய்து வருகின்ற மழையின் காரணமாக குளத்தில் 13 அடி நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக தற்போது மீன் பிடிபடுகின்ற அளவு குறைவடைந்துள்ளது. நாளாந்தம் 15 நபர்கள் தொழிலை மேற்கொள்ளுகின்றபோதும் 100 கிலோவிற்கும் குறைந்த அளவில் மட்டுமே மீன்பிடிபடுகின்றது. குளத்தின் நீர்மட்டம் 16 தொடக்கம் 20 அடி அதிகரிக்கின்ற போது அதிக அளவில் மீன் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெரும்பான்மையான மீனவர்கள் குளத்தின் நீர் அளவு அதிகரிக்கும் வரை தற்காலிகமாக மீன்பிடியை நிறுத்தி உள்ளார்கள்.

2021 ஆண்டு ஜனவரி 20ம் திகதிக்கு பின்னரே அதிக அளவில் மீன்பிடிபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தற்போது விடப்பட்ட மீன்குஞ்சுகளை மீனவ சங்கம் மற்றும் மீன்பிடி திணைக்களம் அவதானித்து வருகின்றது.

2021ம் ஆண்டு மீன் குஞ்சுகளின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது

1. Fry (15 நாள் வளர்ச்சி அடைந்த குஞ்சு ) – 50 சதம்

2. Fingerlings (15 – 45 நாள் வளர்ச்சி அடைந்த குஞ்சு) – 3.00 ரூபாய்

3. Advance Fingerlings (45 – 75 நாள் வளர்ச்சியடைந்த குஞ்சு) 5.00 ரூபாய்

Covid 19 தொற்று காரணமாக 26.11.2020 தொடக்கம் கிராமங்கள் தனிமைப்படுத்தல் நிலையின் இருந்ததன் காரணமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

2021 தொடக்கம் மீனவர் சங்கத்தின் கொள்ளளவு விருத்தி மற்றும் கீழ் குறிப்பிடப்படும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்த முடியும்.

1. ஏனைய 3 குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல்.

2. மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல்.

3.மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல்.

4. புகை கருவாடுக்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல்.

5. சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல்

6. நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.

7. நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல்.

2021ல் மேற்படி ஏழு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நன்றி

Yours faithfully,
Rasalingam Vigneswaran

DIRECTOR
PLEDGE TO RESTORE FOUNDATION
+94 77 307 5998

29.12.2020