Mon - Fri: 10:00AM - 4:00PM / Closed on Weekends info@pledgetorestore.org

வலை வள்ளங்களுடன் ஆர்வத்துடன் தயாராகும் கஞ்சிகுடியாறு மீனவர்கள்

நிதி அனுசரணை:- அன்பு நெறி USA
இணைப்பாக்கம்:- IMHO USA மற்றும் Pledge to Restore
அனுசரணை:- Assist RR (SL)

அனுசரணை:- யுளளளைவ சுசு (ளுடு)
தொடர் கண்காணிப்பு:- Pledge to Restore

திட்டம்:- கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதன் ஊடாக கஞ்சிகுடியாறு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, பரப்பளவும் அதிகரித்ததன் காரணமாக குளத்து மீன்கள் சுதந்திரமாக நடமாடி திரிந்ததுடன் உணவுதேடி காட்டுப்பகுதிக்குள் சென்ற மீன்கள் தனது இனத்தை பெரிக்கிக்கொண்டு குளத்தின் ஆழமான பகுதியை நோக்கி நகர்ந்து வருவதற்கான காலம் கணிந்துள்ளதால் மூன்று மாதங்களாக ஓய்வெடுத்த மீனவர்கள் தங்கள் வலை வள்ளங்களை ஆர்வத்துடன் வழமைக்கு கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றன.

கஞ்சிகுடியாறு விவசாயிகள் குளத்து நீரை திறந்தெடுத்து இடைப்போக பயிர்ச்செய்கைக்காக தயார்ப்படுத்துகின்ற அதே நேரத்தில் மீனவர்கள் குளத்து நீர் குறைவடைவதை ஆர்வத்தோடு அவதானித்து மீன்பிடிப்பதற்கு தங்களை தயார்ப்படுத்துகின்றார்கள். கடந்த நவம்பர் 24ம் திகதி ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு தற்போது நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மேலும்; ஒரு மாதம் கடக்கின்றபோது 30 சதவீதமான மீன்கள் வளர்;ச்சிடையந்த நிலையில் அதனை அறுவடை செய்ய முடியும். இருப்பினும் பழைய மீன்கள் பல்கிப்பெருகிய நிலையில் தற்போது அறுவடைசெய்வதற்கு பொருத்தமானதாக இருக்கின்றன.

குளத்தில் (17.5 அடி நீர் உள்ளது) அரை அடி நீர் குறைவடைந்துள்ள நிலையில் தற்போது நாளாந்தம் 20 மீனவர்கள் ஒவ்வொருவரும் 10 – 15 கிலோ கிராம் மீன்கள் பிடிக்கின்றார்கள். இந்த வருடத்தின் மீன்பிடியின் ஆரம்பப் பகுதி, இனிவருங்காலங்கள் பதிவு செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தங்களின் தொழிலை ஆர்வத்துடன் மேற்கொள்வார்கள். அனைத்து மீனவர்களும் தங்களின் தொழிலை மேற்கொள்கின்றபோது இரவு மற்றும் பகல் ஆகிய இரு பிரிவுகளாக தங்களின் தொழில் முறையை வகுத்துக்கொள்வார்கள்.

நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற கஞ்சிகுடியாறு முருகன் கோவில் திருவிழாவின் ஆறாம் நாள் பூசை (05.04.2021) மீனவர் சங்கத்திற்கு உரியது. இந்தவருடம் சிறப்பாக மீன்பிடி தொழில் நடைபெற வேண்டும் என்பதற்காக அனைத்து மீனவர்களும் ஒன்றுசேர்ந்து இப்பூசையை சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய நிலையில் சில்லரை விலையாக ஒரு கிலோகிராம் மீன் 350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும் சாகமம் குளத்தின் மீனவர்களிடம் இருந்து வியாபாரிகள் 250 ரூபாவிற்கும், கஞ்சிகுடியாறு குளத்தின் மீனவர்களிடம் இருந்து 220 ரூபாவிற்கு வியாபாரிகளால் மீன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றது. மீனவர்களுக்கு வியாபாரிகளால் முற்பணம் மற்றும் வலை போன்ற பொருட்கள் முன்கூட்டியே கடன் அடிப்படையில் வழங்கப்பட்டதற்காகவே மீனை குறைந்த விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்ற நிலை தொடர்ந்தும் நீடிக்கின்றன. இந்நிலையயை மாற்றி அனைத்து மீன்களையும் மீனவர் சங்கமே கொள்முதல் செய்து விற்பனைசெய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. அதிக அளவில் மீன் பிடிபடுகின்றபோது மாற்று வழி தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், இதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நன்றி
Yours faithfully,

Rasalingam Vigneswaran
DIRECTOR
PLEDGE TO RESTORE FOUNDATION
+94 77 307 5998
31.03.2021