கொரோனா மூன்றாவது அலையில் போக்குவரத்து தடை காரணமாக வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களுக்கன அவசர உலர் உணவு விநியோகம்
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளான பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து மிகவும் வறுமையான குடும்பங்களை தெரிவு செய்து முதலாவது அவசர நிவாரண உதவிகள் குறைந்தது 300 குடும்பங்கள் என்கின்ற இலக்கை நிர்ணயித்து 06.06.2021 அன்று இந்த அவசர நிவாரண உதவிக்கான குழு உருவாக்கப்பட்டது.
இந்தக் குழுவில் Pledge to Restore Foundation, S.T.E.P.S, People Helping People Foundation, People Welfare Association and ABCD நிறுவனம் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் திரு கோகுலன், திரு பகிரதன், திரு.ஆதவன், திரு. மயூரன், திரு.அசோக், திரு.மாறன், திரு.தீபன், திரு.நிரோயன் ஆகிய தன்னார்வ சமூக நலன் விரும்பிகளும் இந்த அவசர நிவாரண உதவிக்காக தங்களுடைய பங்களிப்பை செய்திருந்தனர்
இந்தக் குழு உருவாக்கப்பட்டு வாட்ஸ்அப் தொடர்பாடல் மூலமாக ஒரு வாரத்திற்குள் நாம் எதிர்பார்த்த 300 அவசர உலர் உணவு பொதிகள் என்கின்ற இலக்கையும் தாண்டி 422 உலர் உணவு பொதிகள் வழங்கக்கூடிய அளவு நிதி கிடைக்கப்பெற்றது இந்த நிதி ஊடாக மேற்குறிப்பிடப்பட்ட 7 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தன்னார்வ சமூக செயற்பாட்டு குழுவினரை ஒருங்கிணைத்து Zoom இணையவழி கலந்துரையாடல்கள் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஒரு இணைப்பாளர்கள் தெரிவு செய்தோம். இந்த இணைப்பாளர்களின் இணைப்பாக்கத்தின் ஊடாக ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி குழுக்களாக இந்த அவசர உலர் உணவு விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனியாக செயற்பட்ட குழுவினர் மிக விரைவாக அந்தந்த பகுதியிலேயே குறிப்பாக உள்ளூரிலேயே கிடைக்கக் கூடிய அவசர அவசிய உலர் உணவுகளை சேகரித்து பொதிகள் ஆக்கப்பட்டு உடன் விநியோகத்திற்கு தயார் செய்தனர்.
உலர் உணவு பொதிகளை தயார் செய்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் பிரதேச செயலாளர்களின் அனுமதிகளை பெற்றுக் கொண்டதுடன் அந்தந்த பிரதேச செயலகங்களின் வழங்கப்படுகின்ற அவசர உலர் உணவு திட்ட நடைமுறைகளுடன் சிறந்த இணைப் பாகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு ஒவ்வொரு பகுதிகளிலும் அவசர உலர் உணவு விநியோகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
உலர் உணவு பொதிகள் செய்வதில் குறிப்பாக உள்ளூரிலேயே கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது
அத்துடன் உள்நாட்டு மரக்கறி விதைகளை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வத்தை காட்டி இருந்தோம். தொடர்ந்து போக்குவரத்து தடை மேற்கொள்ளப்படுமாகஇருந்தால் வீட்டுத் தோட்ட செய்கை ஊடாக வீட்டுக்கு தேவையான மரக்கறிகளை உற்பத்தி செய்கின்ற அளவு மரக்கறி விதைகளை தனியாக பொதிசெய்து உலர் உணவுடன் சேர்த்து வழங்கப்பட்டது.
இதன்படி
2.திருக்கோயில் 12.6.2021
3.பொத்துவில் 13.6.2021
4.சம்மாந்துறை 13.6.2021
5.கல்முனை 13.6.2021
6.நாவிதன்வெளி 15.6.2021
7.ஆலையடிவேம்பு 21.6.2021
ஆகிய பிரதேச செயலகங்களில் அவசர உலர் உணவு விநியோகம் பிரதேச செயலகத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டன.
இந்த உலர் உணவு விநியோகத்திற்கான பெரும்பான்மையான போக்குவரத்து செலவுகளை அந்தந்த பகுதியில் இருக்கின்ற பிரதேச இணைப்பாளர்களின் பங்களிப்பாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது ஒரு விசேட அம்சமாகும்
பிரதேச இணைப்பாளர்கள்
1.காரைதீவு – தி.ரு.S.கிறிஸ்டோபர்
2.திருக்கோயில் – திரு. S. வீரமணி, திரு.சேந்தன், திரு.தினேஷ்,
3.பொத்துவில் -திரு.T.நிஷாந்தன்
4.சம்மாந்துறை – திரு.S.செல்வமணி
5.கல்முனை – திரு.K.செல்வராஜ், திரு.K.வரதராஜன்
6.நாவிதன்வெளி -திரு.S.E.தேவபாலன்
7.ஆலையடிவேம்பு – திரு. S.வீரமணி, திரு.R.விக்னேஸ்வரன்
*அவசர நிவாரண உதவிகள் வழங்குகின்ற போது பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னூட்டல்கள்*
*குழுவின் பரிந்துரைகள்*
நன்றி
R.Vigneswaran
Director Ampara,
Pledge to Restore Foundation