Humanitarian Project in Collaboration with Tamil Aid & IOC Tamil Radio UK
Tamil aid தொண்டு நிறுவணம் லண்டன் நிதியுதவி மூலம் IOC தமிழ் வானொலி லண்டன் அணுசரனையுடன் உலர் உணவு விநியோகத்திற்கான 1000 பவுண்ஸ் நிதியுதவியுடன் கொரணா பெரும் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த வறிய மக்களுக்காக மேற்படி நிதியுதவி மூலமான உலர் உணவுப் பொருட்கள் 09 July 2021 வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டமானது போரினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இப்போதும் கருதப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இப்படியான பின்னடைவுகளை அந்த மாவட்ட மக்கள் பல அழுத்தங்களையும் தொடர்ந்தும் சந்தித்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த கொரோனா தோற்று நோயின் தாக்கம் அந்த மாவட்டம் தொடர்ந்தும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றது.
மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் நாட்கூலி செய்கின்றவர்கள், வீடுகளில் முடங்கி போய் இருக்கின்றனர். அவ்வப்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்ற ஊரடங்கு உத்தரவும் அந்த மாவட்டத்தில் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்துகின்றது.
வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. கொரணா வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க வேண்டிய தேவையும் அந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கின்றது.
இந்த விதத்தில் புலத்தில் வாழ்கின்ற சமூகம் தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு சாட்சியாக இங்கிலாந்து நாட்டில் இருக்கும் அமைப்புகள் மற்றும் வானொலிகள் ஐஓசி தமிழ் வானொலி இவர்கள் இணைந்து நாட்டில் செயல்பட்டு கொண்டு வரும் PLEDGE TO RESTORE FOUNDATION ஊடாக நிவாரண உதவிகளை செய்திருக்கின்றார்கள்.