பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அரசசார்பற்ற நிறுவனத்தினால் உலர் உணவுப்பொருட்கள்.
க.ருத்திரன்.
கொரோனா தொற்று முடக்கநிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு ‘பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அரசசார்பற்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இன்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்மடு,கண்ணகிபுரம்,பேத்தாழை,பு துக்குடியிருப்பு மற்றும் கறுவாக்கேணி போன்ற கிராமங்களைச் சேர்ந்த வாழ்வாதராம் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த 100 குடும்பங்களுக்கு 1500 ரூபா பெறுமதிவாய்ந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
வாழைச்சேனை அன்னை திரேசா ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அருட்தந்தை நோட்டன் ஜோன்சன் ,’பிளேச் ரூ ரீஸ்ரோர் ‘ அமைப்பின் பணிப்பாளர் சி.சிவயோகநாதன்,கிராமசேவகர் அ.பிரபு ஆகியோர் கலந்துகொண்டு இவ் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
வாகரை பிரதேசத்திலும் குறித்தஅமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர்.
வாகரை பிரதேசத்திலும் குறித்தஅமைப்பு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தனர்.
அன்னை திரேசா ஆலயத்தின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியமும் விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டதாக மேற்படிஅமைப்பின் தலைவர் தெரிவித்தார்.