அம்பாரை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 22 கிராம சேவகர் பரிவுகளில் ஒன்றான காஞ்சிரங்குடா பிரிவு சுமார் 158 குடும்பங்களையும், 499 சனத்தொகையையும் கொண்ட பின்தங்கிய கிராமமாக காணப்படுகின்றது.
யுத்தகாலப்பகுதியில் இக்கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் இங்கு வாழும் மக்கள் தமது வாழ்வாhர தொழிலாக மீன்பிடி, விவசாயம், கூலித்தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இக்கிராமத்திற்குட்பட்டுள்ள ரூபஸ் குளம் இப்பகுதிமக்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் பங்களிப்பு செய்து வருகின்றது. இப்பகுதி மீனவர்களை உள்ளடக்கிய ரூபஸ் குள நன்னீர் மீனவர் சங்கம் 45 உறுப்பினர்களை கொண்டு காணப்படுகின்றது. அவர்களுடன் கலந்துரையாடி இத்திட்டத்தினை இங்கு செயற்படுத்த முடிந்தது.
Pledge to Restore Foundation நிதி அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.வு.கஜேந்திரன் பங்குபற்றுதலுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.வு.கஜேந்திரன் பங்குபற்றுதலுடன் உதவிப் பிரதேச செயலாளர் திரு.சதிசேகரன், மற்றும் இவ் அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் திரு.இரா. விக்னேஸ்வரன், அக்கரைப்பற்று பகுதி இணைப்பாளர் திரு.தினேஸ், திருக்கோவில் இணைப்பாளர் சேந்தன் மற்றும் மீன்பிடி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபராஜிதன், மீன் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் திரு.ரவிக்குமார் ஆகியோரது பங்குபற்றுதலுடன் (10.08.2021) பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ரூபஸ் குள நன்னீர் மீன்பிடி மீனவ சங்க செயலாளர் திரு.தியாகராஜா, பொருளாளர், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றபோது.
Pledge to Restore ஆஸ்திரேலிய நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்ற அமைப்பாகும் இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் எமது அலுவலகம் அமைந்திருக்கின்றது.
கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு தொழில் வாய்ப்புகளை இழந்த அல்லது
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எமது அமைப்பு பல்வேறு நிவாரண பணிகளை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செய்திருக்கின்றோம்.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் விவசாய மற்றும் கல்வித் அபிவிருத்திக்கான செயல்திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணை அபிவிருத்திக்கான செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
நாட்டில் கொரோனா பாதிப்பால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளான நிலையில் இணையவழி ஊடாக மற்றும் ஏனைய தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி கல்வியை தொடர்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா (தேசிய பாடசாலை) கல்லூரியில் தற்போது ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ளுஅயசவ ஊடயளளசழழஅ ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதேச செயலாளர் உரையாற்றுகையில், சிறந்த ஒரு முயற்சியாகவும், மீனவர்களுக்கு இந்த கொரோனா காலப்பகுதியில் வெளியிடம் செல்லாது தமது பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ள பயனுடையதாக காணப்படுகின்றது எனவும், கடந்த வருடம் கஞ்சிகுடிச்சாறு குளத்திலே மீன்குஞ்சுகளை விட்டுள்ளனர். இந்த வருடம் ரூபஸ் குளம், தொடர்ந்து சாகாமம், தங்கவேலாயுதபுரம், பெரியகுளம் போன்ற குளங்களையும் இணைத்து மீன் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறந்த வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மீனவ சங்கத்தினர் உரையாற்றும் போது, இத்திட்டத்தினூடாக கட்டாயம் நாங்கள் பயனடைவதுடன் விடப்பட்ட இக்காலப்பகுதிக்குள் சிறிய வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க மாட்டோம் என்பதுடன், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை நாங்கள் தவிர்த்து 3.5 இஞ்சிற்கு மேற்பட்ட வளைய வலைகளை பயன்படுத்தி பிடிப்பதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பிடப்பட்ட நிகழ்வினை எங்களிடம் பொறுப்பளிக்கப்பட்டது போல மிகவும் சிரமத்தின்மத்தியிலும், கொரோனா சூழ்நிலை மத்தியிலும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.. குறிப்பிட்ட நிகழ்வினை செய்தித்தாள்களிலும் (மட்டக்களப்பு செய்தி, வீரகேசரி, டாண் செய்தி போன்றவற்றிலும் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://m.facebook.com/story.php?story_fbid=4223017077789245&id=1186512341439749https://youtu.be/vEB2P4UooZw
http://www.battinews.com/2021/08/50_12.html?m=1