Saturday - Sunday: 10:00AM - 4:00PM info@pledgetorestore.org
14 Aug 2021

Pledge to Restore Foundation நிதி அனுசரணையில் இந்த அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் திரு.இரா. விக்னேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளர் திரு.T.கஜேந்திரன் அவர்களுடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றபோது…..

நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மீனவர்களை பாதுகாக்கின்ற வகையில் இன்று இந்த “நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சங்கம் ருபேஸ் குளம்” மீனவர்கள் பயன் அடைகின்ற வகையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை ரூபேஷ் குளத்தில் பராமரித்து அதனை இந்த குளத்தின் அங்கத்தவர்களான 34 குடும்பங்கள் பயனடைய இருக்கின்றார்கள்.
இதற்காக Pledge to Restore Foundation அமைப்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.

கடந்த வருடம் கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து தடையின் போது மக்கள் உணவுத் தேவைக்காக இந்த மீன்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தொடர்ச்சியாக கடல் மீன்களுக்கு நிகராக நன்னீர் மீன்களுக்கும் விலை சமமாக இருக்கின்றது. இதனூடாக வறுமையில் இருக்கின்ற எமது மீனவர்கள் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது. எனவே நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து இந்த சங்கங்களுடன் எமது அமைப்பு பணியாற்ற விரும்புகின்றது அத்துடன் இந்த மீன்களுக்கான பெறுமதிசேர் திட்டங்களையும் செய்வதற்காக நாம் ஆராய்ந்து வருகின்றோம் இத்திட்டத்தை நாங்கள் முறையாக பயன்படுத்துகின்றபோது மீனவர்கள் வறுமை நிலையிலிருந்து மேலோங்கி நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நிலை உருவாகும் எனவே தொடர்ந்து எமக்கு ஆதரவை வழங்கி கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.

நாம் அனைவரும் இணைந்து செயற்படுகின்ற போது நன்னீர் மீன் வளர்ப்பு ஒரு பாரிய முன்னேற்றம் அடைந்த நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுகின்ற சிறந்த தொழிலாக மாற்றம் அடையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இல்லை.

கடந்த வருடம் கஞ்சிகுடிச்சாறு குளத்திலே மீன்குஞ்சுகளை விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம் இந்த வருடம் ரூபஸ் குளம், தொடர்ந்து சாகாமம், தங்கவேலாயுதபுரம், பெரியகுளம் போன்ற குளங்களையும் இணைத்து மீன் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறந்த வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இத்திட்டத்திற்காக அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற எமது நிறுவனத்தின் இணைவைப்பாளர்கள் திரு. இதயதினேஷ் மற்றும் திரு. சேந்தன் ஆகியோருக்கு இந்த வேளையில் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.

மீன் வளர்ப்பு திட்டத்தில் பங்கு பெறுகின்ற உத்தியோகத்தரான
Mr.Ravikumar (Aquaculture extension Officer- Central)

Mr.Abirajithan (Fisheries Development Officer- Provincial)

ரூபஸ் குலத்தின் மீனவ சங்க செயலாளர் திரு. தியாகராசா ஆகியோருடன் இந்த நிகழ்வை சிறப்பித்து இருக்கின்ற திருக்கோவில் பிரதேச செயலாளர்
Mr.T.Gajenthiran ஆகியோருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றோம்

நன்றி

R. Vigneswaran (Director of Pledge to Restore Foundation-Ampara)