மேய்ச்சல் தரை என்று அழைக்கப்படுகின்ற இடங்களில் பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்
14 Aug 2021
நேற்று 06.08.201 பி.ப 2.30 மணிக்கு கரடியநாறு கால்நடை அபிவிருத்தி காரியாலயத்தில் கரடியநாறு பிரதேசத்திற்குட்பட்ட பண்ணையாளர்களுக்கான கால்நடைகளுக்கான காதுபட்டி அணிவித்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் விளக்க கூட்டமானது pledge to restore நிறுவணத்தின் மட்டக்களப்பு பணிப்பாளர் ச.சிவயோக நாதன் தலைமையில் கரடியநாறு பிரதேச கால்நடை அபிவிருத்தி உத்தியேகஸ்தர் திரு.பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது .
இதில் சின்னப் புல்லுமலை.கோப்பாவெலி. பங்கிடாவெளி. கித்துள். ஏறாவூர். பணையவெளி். இலுப்படிச்சேணை. கொம்மாதுறை. கரடியநாறு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தவைர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் பயனாலிகள் விபரம் தரமுடியும் என்றும் எதிர்வரும் பதிணைந்தாம் திகதி ஏறாவூர் பிரதேச கால்நடைகள் 500 க்கு காதுப்பட்டி அணிவிப்பதற்கான ஒழுங்குகளை தம்மால் செய்ய முடியுமென அதன் தலைவர் கூறினார்.கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தரும் தனது இனக்கத்தை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள்.
மேய்ச்சல் தரை என்று அழைக்கப்படுகின்ற இடங்களில் பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அவர்களுடைய பொருளாதாரங்கள் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது.
இதன் அடிப்படையில் எமது அமைப்பானது பண்ணையாளர்கள் சங்கங்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.
அதன்டிப்படையில் அந்த பகுதிகளில் இருக்கின்ற மாடுகள் சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்யாமல் இருப்பதனால், கால்நடைகளை நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்ய வேண்டிய தேவையும் வந்திருக்கின்றது.
அந்த விதத்தில் எமது அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போது இருக்கின்ற பிரச்சினைகளுக்கான பொருளாதாரத்தை தக்க வைக்கின்ற முயற்சியாக சந்திப்புகளையும், ஏற்பாடுகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.