மட்டக்களப்பு மாவட்டத்திலே கால்நடை வளர்க்கும் பண்ணையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள்.
மேய்ச்சல் தரை என்று அழைக்கப்படுகின்ற இடங்களில் பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அவர்களுடைய பொருளாதாரங்கள் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது.
இதன் அடிப்படையில் எமது அமைப்பானது பண்ணையாளர்கள் சங்கங்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
அதன்டிப்படையில் அந்த பகுதிகளில் இருக்கின்ற மாடுகள் சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்யாமல் இருப்பதனால் கால்நடைகளை நாங்கள் அந்த சட்டத்துக்கு உட்பட்டு பதிவு செய்ய வேண்டிய தேவையும் வந்திருக்கின்றது.
அந்த விதத்தில் எமது அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போது இருக்கின்ற பிரச்சினைகளுக்கான பொருளாதாரத்தை தக்க வைக்கின்ற முயற்சியாக சந்திப்புகளையும், ஏற்பாடுகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.