Pledge to Restore Foundation ஆஸ்திரேலிய நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்ற அமைப்பாகும் இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் எமது அலுவலகம் அமைந்திருக்கின்றது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற கோரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு தொழில் வாய்ப்புகளை இழந்த அல்லது
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எமது அமைப்பு பல்வேறு நிவாரண பணிகளை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செய்திருக்கின்றோம்.
வடக்கு மாகாணத்தில் விவசாய மற்றும் கல்வித் அபிவிருத்திக்கான செயல்திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணை அபிவிருத்திக்கான செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளான நிலையில் இணையவழி ஊடாக மற்றும் ஏனைய தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்தி கல்வியை தொடர்வதற்கான ஸ்மார்ட் கிளாஸ் ரூம் Smart Classroom ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் இதற்காக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுஜன் அவர்கள் நிதி உதவிகளையும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றார்.
நாட்டில் Covid-19 வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மீனவர்களை பாதுகாக்கின்ற வகையில் இன்று இந்த “நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சங்கம் ருபேஸ் குளம்” மீனவர்கள் பயன் அடைகின்ற வகையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை ரூபேஷ் குளத்திலேயே பராமரித்து அதனை இந்த குளத்தின் அங்கத்தவர்களான 34 குடும்பங்கள் பயனடைய இருக்கின்றார்கள்
இதற்காக Pledge to Restore Foundation அமைப்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். கடந்த வருடம் கஞ்சிகுடியாறு குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டதன் ஊடாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து தடையின் போது மக்கள் உணவுத் தேவைக்காக இந்த மீன்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தொடர்ச்சியாக இன்று கடல் மீன்களுக்கு நிகராக நன்னீர் மீன்களுக்கு விலை சமமாக இருக்கின்றது. இதனூடாக வறுமையில் இருக்கின்ற எமது மீனவர்கள் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது எனவே இந்த நன்னீர் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து இந்த சங்கங்களுடன் எமது அமைப்பு பணியாற்ற விரும்புகின்றது அத்துடன் இந்த மீன்களுக்கான பெறுமதிசேர் திட்டங்களையும் செய்வதற்காக நாம் ஆராய்ந்து வருகின்றோம் இத்திட்டத்தை நாங்கள் முறையாக படுத்துகின்றபோது இந்த மீனவர்கள் வறுமை நிலையிலிருந்து மேலோங்கி நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கான நிலை உருவாகும் எனவே தொடர்ந்து எமக்கு ஆதரவை வழங்கி கொண்டிருக்கின்ற பிரதேச செயலகம் மற்றும் மீன்பிடி திணைக்களம் ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்.
கடந்த வருடம் கஞ்சிகுடிச்சாறு குளத்திலே மீன்குஞ்சுகளை விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தோம் இந்த வருடம் ரூபஸ் குளம். தொடர்ந்து சாகாமம் தங்கவேலாயுதபுரம் பெரியகுளம் போன்ற குளங்களையும் இணைத்து மீன் வளர்ப்புத் திட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறந்த வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கின்ற எமது நிறுவனத்தின் இணைவைப்பாளர்கள் இதயதினேஷ் மற்றும் சேர்ந்த ஆகியோருக்கு இந்த வேளையில் நாங்கள் நன்றி கூறுகின்றோம்.
மீன் வளர்ப்பு திட்டத்தில் பங்கு பெறுகின்ற உத்தியோகத்தரான
Mr.Ravikumar (Aquaculture extension Officer- Central)
Mr.Abirajithan (Fisheries Development Officer- Provincial)
ரூபஸ் குலத்தின் மீனவ சங்க செயலாளர் திரு தியாகராசா ஆகியோருடன் இந்த நிகழ்வை சிறப்பித்து இருக்கின்ற திருக்கோவில் பிரதேச செயலாளர்
MR.T.Gajenthiran ஆகியோருக்கும் நன்றி கூறிக் கொள்கின்றோம்